July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சுப்ரமண்யம்.. என்று எழுதவேண்டுமா? சுப்பிரமணியம் என்று எழுத வேண்டுமா?/ முத்துமணி

1 min read

Subramaniyam or Subiramaniyam by Muthumani

சுப்ரமண்யம்..அல்லது சுப்பிரமணியம்?

முதற்கண் மேற்கண்ட பெயர்ச்சொல் அதாவது சுப்பிரமணியன் அல்லது சுப்பரமணியன்… என்பதில் இடம்பெறும் சுப்ர அல்லது சுப்பிர… என்னும் பகுதி தமிழன்று என்பதறிக.’சுப்ர’ என்பதைத் தமிழாக்கும் முயற்சியில் தோன்றியதே ‘சுப்பிர’ என்னும் பகுதி ஆகும்.

தமிழில் ச் என்னும் உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து சக்கரத்தோடு உணர்ந்த அகரம் வரலாம். ரகர அகரம் நேரடியாக வந்த காரணத்தால் நம் மொழிக்கு தக்கபடி அதில் ஒரு மாற்றம் செய்திருக்கின்றனர்.

கஞ்சம்(இன எழுத்தின் வருக்கம்)
கச்சம்.(அதே வருக்கம்)

ஞ்….. என்னும் எழுத்தை தொடர்ந்து அந்த வரிசை எழுத்துக்கள் அல்லது அதன் இனமான அகர வரிசை எழுத்துக்கள் வரவேண்டும்.. ஒன்று வல்லினம் மற்றது மெல்லினம்..
மஞ்ஞை.
மஞ்சள்

திட்டம்…
திண்டாட்டம்..
பட்டம்
பண்டம்
குற்றம்
குன்றம்
அன்றில்
அற்றம்
கொக்கு
கொங்கு

ப்… என்னும் ஒற்றுக்குப்பின் ப வரிசை எழுத்துகள் (ப பா பி…..)வரும்.
ம்… என்னும் எழுத்தைத் தொடர்ந்து (ப பா பி) இந்த வரிசை எழுத்துகள் மட்டும் வரும்.
ப்… என்பதன் இனமான ம்…. என்னும் மெய்யைத் தொடர்ந்தும் அகர வரிசை எழுத்துக்கள் இடம்பெறும்.
பப்படம்
பம்பரபம்

அப்பம்
ஆம்பூர்
பாப்பா
பம்பரம்
கப்பல்
கம்பம்

ஆனால் சுப்ர என்பதில் பகர ஒற்றைத் தொடர்ந்து ரகரம் இடம்பெற்றிருக்கிறது. இது தமிழ் எனும் எழுத்தைத் தொடர்ந்து அதன் வரிசையில் உள்ள எழுத்துகள் இடம்பெறும். அப்பன் அப்பாவி அப்பி தப்பு ஆப்பு ….தமிழ் மரபின்படி சுப்ர என்பதை மாற்றுவதற்காக…பி என்னும் எழுத்து சேர்க்கப்பட்டது. பின்வரும் சொற்களைப் பாருங்கள்..

சப்ரம் (வடசொல்)…சப்பரம் என்று வழங்கப்படுகிறது ப.. சேர்த்து…
சப்ர மஞ்சம்… என்று மாற்றமடைகிறது
சுப்ரபாதம்…. சுப்பிரபாதம்

சுப்ரமண்யம்… என்னும் வடசொல்லைக் கீழ்கண்டவாறு பிரிக்கவேண்டும்
சு+ப்ரமண்யம்….சுப்ரமண்யம்…
சு….. பரிசுத்தம்… தூய்மையான என்னும் பொருள் தரும்.
ப்ரமண்யம்……….ஆனந்தம் என்னும் பொருள் தரும்.
ப்ரமண்யம். ஆனந்தம்… ஆனந்தம் தீய வழியிலும் வரலாம் என்பதால் அது குற்றமுடைய ஆனந்தம்… சுப்ரமணியம்…. குற்றமில்லாத தூய்மை நிறைந்த ஆனந்தம் அது ஒரு தெய்வீக நிலை.. அந்த நிலையில் இருப்பவன் முருகன் அல்லது அந்த நிலையை நமக்குத் தருபவன் முருகன்.

எந்தக் குற்றமும் இல்லாத தூய்மையான இன்பநிலை… அதைத்தான் சுப்ரமணியம்.. இன்னும் செல் குறிக்கிறது. அத்துடன் அன் என்னும் விகுதியைச் சேர்த்து, சுப்பிரமணியன் சுப்பிரமணி என்று பெயராகத் தமிழர் சூடிக்கொண்டனர் நம் எழுத்து வழக்குப்படி

சுப்ர
மண்யம்
இரண்டுமே மரபை மீறும் என்று கருதி
சுப்பிர.. இங்கு ..பி.. சேர்க்கப்பட்டது.
மணியம்… இங்கு ..இ…சேர்க்கப்பட்டது

சுப்ரமண்யம்… என்பது தூய்மையான இன்ப நிலையை தரக்கூடிய ஒரு நிலை அந்தப் பேரின்பத்தைத் தருவதால் அவரைச் சுப்ரமண்யக் கடவுள்.. என்று கூறுவர்.

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமணியம் என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

ப்ரம்மம்
ப்ரேமம்
ப்ரியம்
சித்ரம்
இவ்வாறெல்லாம் வட மொழியில் சொற்கள் மெய் எழுத்துக்களை முதலாகக் கொண்டும் தொடங்கும்… தமிழில் அது முறையன்று என்று கருதி
பிரேமம் பிரேமா
சித்திரம்..
பிரியம்… என்று மாற்றி எழுதிக் கொள்கிறோம் பெயர் வைக்கிறபோது
சிலர் அழகு என கருதி சித்ரா ப்ரியா… என்று அப்படியே வைத்துக் கொள்வதும் உண்டு… சித்ரா பௌர்ணமி …
புத்த பூர்ணிமா.. பூர்ணம் என்பதுதான் வடசொல் நாம் அருள் பூரணம் என்று மாற்றிக் கொள்கிறோம்.. இப்படி இடம் பார்த்து எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வதும் தமிழ் மரபைக் கட்டிக் காப்பதற்காக..
வர்க்கம்… வருக்கம்
வர்ணம்… வருணம்
ருத்ரம்… ருத்திரம்
உத்திரம்… உத்திரம்
பத்திரம்… பத்திரம்
சொர்க்கம்… சுவர்க்கம்…
சொப்னம் ..சொப்பனம் என நம் மொழி வழக்கில் எழுத்துகளை மாற்றி பயன்பட்டு வருகின்றன… இவை சான்றுகள் மட்டும்..

அதைப்போல சுப்ர… என்னும் சொல்லோடு பி… என்னும் எழுத்து சேர்க்கப்பட்டு..சுப்பிர…. என்று வழங்கப்படுகிறது…
சுப்ரபாதம் என்பது தூய்மையான ஆனந்த நிலையை தரும் திருவடிகள்…. இறைவனுடைய திருவடிகள்… அவரைப் போற்றிப் பாடுவது… சுப்ரபாத வழிபாடு..

மெய்மயக்கம்.

மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து அதாவது தொடர்ந்து வருவது தமிழில் மெய்மயக்கம் எனப்படும்..
ஒரு மெய்யெழுத்தைத் தொடர்ந்து அதேமெய் வரும் நிலை உடனிலை மெய்மயக்கம். வேறு மெய்வருமானால் வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும்.

கொச்சம்…ச்..ச்.. உடனிலை மெய் மயக்கம்
கொஞ்சம்..ச்..ஞ்.. வேற்றுநிலை மெய்மயக்கம்.

க்ச்த்ப்… என்னும் நான்கு எழுத்துக்களும் தன்னிலை மெய்மயக்கத்தில் மட்டும் வரும்…
எனவே சுப்ர… என்று எழுதுவது பிழை ஆகிவிடுகிறது…

இவை தவிர 14 மெய் எழுத்துக்கள் வேற்றுநிலை மெய் மயக்கத்தில் வரும். தெய்வம்
சோர்வு
கஞ்சம்…
ழ் ர் இரண்டு எழுத்துக்களும் உடனிலை மெய்மயக்கம் பெறுவதில்லை.. வேற்றுநிலை மெய் மயக்கத்தில் வரும்
வாழ்க்கை
பயிர்ப்பு
தனிச் சொற்களிலும் கூட்டுச்சொற்களின் இடையில் ய் ர் ழ் என்னும் எழுத்துகள் மூன்று மொழிகளில் மயங்கி வரும்.
காய்ச்சல்…ய்ச்ச்
சேர்க்கை..ர்க்க்
வாழ்க்கை..ழ்க்க்
மந்த்ரம்… வடசொல்லில் ந் என்னும் எழுத்தை தொடர்ந்து த் ர் என்னும் எழுத்துகள் வந்துள்ளன. தமிழில் நகரத்தை தொடர்ந்து தகரம் வரலாம். ஆனால் தகரத்தை தொடர்ந்து ரகரம் வராது. எனவே அதை நாம் மந்திரம் என்று எழுதுகிறோம்.

தமிழ் முத்துமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.