October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தின் முக்கிய கோவில்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை

1 min read

Sami darshan forbade devotees to visit major temples in Tamil Nadu

31.7.2021
கொரோனா பரவலை தடுக்க ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய கோவில்களில் வருகிற 9-ந் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா தொற்று வருகிற 9-ந் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து சென்னையில் இன்று (31ம் தேதி )முதல் வரும் 9-ம் தேதி வரையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட ஒன்பது இடங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகம் 3-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இதனையடுத்து மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,மதுரை மீனாட்சி அம்மன்கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2 ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை கோவில்கள்

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் வட பழனி முருகன் கோவில், கந்தகோட்டம் கந்தசாமி கோவில், சூளை அங்காள பரமேஸ்வரி கோவில், பாடி படவேட்டம்மன் கோவில் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகமவிதிபடி,பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.