October 7, 2024

Seithi Saral

Tamil News Channel

மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து ஓய்வு

1 min read

Babul Supriyo retires from politics after being removed from the ministry

31.7.2021
முன்னாள் ஒன்றிய மந்திரியும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான பாபுலால் சுப்ரியோ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

பாபுலால் சுப்ரியோ

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் பாபுல் சுப்ரியோ. இவர் மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரியாக இருந்த இவர் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர், தான் அரசியலில் இருந்து ஒய்வு பெறப்பபோவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
‛குட் பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சிகளும் என்னை அழைக்கவில்லை. நான் எங்கும் செல்லவில்லை. சமூக பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் காலி செய்துவிடுவேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.