தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு
1 min read
Tax reduction of Rs 3 on petrol in Tamil Nadu
13.8.2021
பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது நாளை(சனிக்கிழமை ) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக பட்ஜெட்
2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்:
வரிமுறைய சீர் செய்யக் குழு
- உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட 4,57,645 மனுக்களில் 2,29,216 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
- வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கெண்ட குழு அமைக்கப்படும்.
- அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தர்வுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனைத்து பொதுசேவை துறைகளிலும் தமின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஆக்கிரமிப்பு
- பொது வினியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்
- அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்
- 2.05 லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது
- பொது நிலங்களை முறையாக பயன்படுத்த ‛அரசு நில மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும்
- அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‛வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ உருவாக்கப்படும்.
- அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்
- 1921ம் ஆண்டு முதலான சட்டசபை ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.
- அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
தொல்லியல் துறைக்கு நிதி
- ஒவ்வொரு ஆண்டும் ‛ஜூன் 3ம் தேதி’ கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும், ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்திகீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்படும்.
- தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ..5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
*முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்தல், விலக்குதலில் எண்ணற்ற பிழைகள் உள்ளன.
*காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
*பழைய வரிகளில் நிலுவையில் உள்ள ரூ.28 ஆயிரம் கோடியை வசூலிக்க சமாதான் திட்டம் அறிவிக்கப்படும்
வரிகுறைப்பு
- பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம், தமிழக அரசுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
- பெட்ரோல் வரி குறைப்பு மூலம் உழைக்கும் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.