May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

1 min read

An additional 3 percent increase in the rate of pay for U.S. government employees

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

29.8.2021

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி (டி.ஏ.,) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு முன் 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும்.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதல் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் ஒன்றிய அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.