May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

Statue of Karunanidhi on Anna Road: MK Stalin’s announcement

1.9.2021

சென்னை, அண்ணா சாலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கருணாநிதிக்கு சிலை

அண்ணா சாலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக முதல்-அமைச்சர் கூறியதாவது:-

அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்படும். மேலும், சட்டவல்லுனர்களை ஆலோசித்து இந்த சிலை நிறுவப்படும்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திராவிட கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்த நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.