June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரி கூட்டு வன்கொடுமை செய்து கொலை

1 min read

Female police officer murdered in Delhi

5.9.2021

டெல்லியில் பெண் காவல் அதிகாரி கடத்தப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீஸ் அதிகாரி

டெல்லி சங்கம் விகார் பகுதியில் கூட்டுகுடும்பத்துடன் வசித்து வந்தவர் 21 வயதான இளம் போலீஸ் அதிகாரி. இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புதுறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி பணிக்கு சென்ற அந்த அதிகாரி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை இதனால் அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றும் மனு அளித்தனர்.

பிணம்

இந்த நிலையில் காணாமல் போன அந்த அதிகாரி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெளியான தகவல் ஒட்டு மொத்த இந்தியாவை அதிர வைத்துள்ளது. அவரை கொடூர கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

போராட்டம்

இத்தகைய சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பொதுமக்களும், சிறுபான்மையினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன. அதே போல சமூக வலைதளங்களிலும் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த அதிகாரியை கொன்றவர்களை விரைவில் நீதிமன்றத்தில் விசாரித்து உடனே தண்டிக்க வேண்டும், கலெக்டர் அலுவலக ஊழல் வெளியே வராமல் இருக்க அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என ஜோதிமணி எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திரினர் குற்றச்சாட்டு

அந்த அதிகாரி கடந்த 26-ம் தேதி மாலை அலுவலகத்தில் இருந்து கடத்தப்பட்டு பரிதாபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *