August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

“நீதிமன்ற பணிகேட்டு யாரும் வரவேண்டாம்”…வீட்டில் போஸ்டர் ஒட்டியுள்ள அமைச்சர் ரகுபதி

1 min read

“No one should come to court” … Minister Raghupathi with a poster at home

5.9.2021
“நீதிமன்ற பணிகேட்டு யாரும் வரவேண்டாம்” என்ற அமைச்சர் ரகுபதி வீட்டில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

நீதிமன்ற பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3,557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இதற்கிடையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று, அரசு பணியிடத்தை பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின
இதையறிந்த அமைச்சர் ரகுபதி, அவர்களிடம், ‘‘இதுபோன்று யாரும் தன்னிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டு வரவேண்டாம், நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்” என்று கூறியதாக தெரிகிறது.

போஸ்டர்

இந்த நிலையில் புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியில் உள்ள அமைச்சர் ரகுபதி வீட்டின் முன்பும் இதுகுறித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘உயர்நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *