May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தூதுவளைக் கீரையின் பயன்கள்

1 min read

தூதுவளை

Benefits of Angelica Lettuce

தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால்தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும்.

தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு வாய்வு கோளாறு ஞாபக சக்தி குறைபாடு உடல் பலவீனம் சத்து பற்றாக்குறை போன்ற நோய்கள் உடலில் தோன்றாது.

மேலும்

மூளை நரம்புகள் பலம் பெறுவதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கீரையை சாப்பிட்டு வருவோருக்கு அதிகமான அறிவு வளர்ச்சி உண்டாகும் இது உறுதி

அறிவு வளர்ச்சியை அதிகமாக தரும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதாலே இந்த கீரையை ஞான மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இதற்கு சான்றாகும்

தூதுவளை கீரையில் மூலம்
சில எளிய வைத்திய முறைகள்

தூதுவளை இலை சாறுடன் சம அளவு நெய் சேர்த்து இலேசாக காய்ச்சி இதில் இரண்டு ஸ்பூன் தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும் மேலும் காய்ச்சல் மார்பு சளி போன்ற நோய்கள் நீங்கும்

மூச்சு திணறல் குணமாக

தூதுவளை கீரையின் வேர் இலை பூ காய் தண்டு இவைகளை சம அளவாக சேகரித்து காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு ஸ்பூன் எடுத்து நானூறுமில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சிஇதை காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள்பருகி வர இரைப்பு நோய் சுவாசகாசம் மூச்சுத்திணறல் சளி போன்ற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.

முக வசீகரம் உண்டாக

தூதுவளை பூவை பதினைந்து எடுத்து பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி இதை தினந்தோறும் குறைந்தது ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் பலம் அதிகரிக்கும் முக வசீகரம் ஏற்படும் அழகும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் கூடும்

ஆண்மை சக்தி உண்டாக

தூதுவளை பூவுடன் சமமாக யானை நெருஞ்சில் பூவையும் சேர்த்து பசும் பாலில் கலந்து காய்ச்சி இதை காலை வேளையில் பருகிவர ஆண்மை சக்தி உண்டாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

விச காய்ச்சலை குணமாக்கும்
தூதுவளை கசாயம்

தூதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு பறித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரேநூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறியவர் என்றால் ஐந்து மில்லி அளவும் பெரியவர்களுக்கு 100 மில்லியளவும் சாப்பிட்டுவர நிமோனியா டைப்பாய்டு போன்ற காய்ச்சல் குளிர் காய்ச்சல் மற்றும் விஷ கிருமி தொற்றால் ஏற்படும் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்

ஆஸ்துமா குணமாக

தூதுவளை இலை
கண்டங்கத்திரி இலை
திப்பிலி இண்டு வேர்இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் 5 கிராம் எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து இதை 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள் நீங்கும்

தீராத சளி மற்றும் மூக்கடைப்பு குணமாகும்

மேலும்

தூதுவளைக் கீரையை இடித்து சாறு பிழிந்து இதில் ஐம்பது மில்லி எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மேலும் மூச்சுத்திணறல் போன்ற கபம் நோய்கள் அனைத்தும் விலகும்

நுரையீரல் வலிமை பெற

தூதுவளை காயை சேகரித்து மோரில் ஊற வைத்து இதை வெயிலில் விட்டு வர்களாக உலர்த்தி பணிக்காலம் மற்றும் மழை காலங்களில் இதை நல்லெண்ணெயில் பொறித்து சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் தொந்தராவல் ஏற்படும் சுவாச தடைகள் நீங்கும்
மேல்மூச்சு கீழ்மூச்சாக வாங்கும் இரைப்பு நோய் விலகும் நுரையீரல் வலிமை பெறும்

சளி இருமல் குணமாக

தூதுவளையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வர சளி இருமல் போன்ற கப நோய்கள் விலகும் மேலும் தூதுவளை பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்

இருமல் குணமாக

தூதுவளை இலை திப்பிலி இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனுடன் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர ஒரு வார காலத்தில் தீராத இருமல் தீரும்

பித்தமயக்கம் குணமாக

தூதுவளை இலைப் பொடியை மூன்று கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் நீங்கும் மேலும் பித்த நோய்கள் அனைத்தும் விலகும்

தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி வரும் நாட்களில் உணவில் புளியை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.