May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடித்தால்…

1 min read
Benefits of drinking salt mixed with lemon juice

*எலுமிச்சை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை சரிசெய்யும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.

இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல தூக்கத்தை தரும்.

எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரும்.

உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள், சீரற்று இருக்கும் இதய துடிப்பை சீராக்க செய்கிறது, மற்றும் உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. இது இயற்கை முறையில் கருவளத்தை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஊக்குவிக்கிறது

உடலில் உள்ள நச்சுக்களை போக்க இந்த பானம் உதவுகிறது. எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது.

உடலில் அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் இரவு நல்ல உறக்கம் கிடைக்கப் பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.