June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா 28,326 பேராக குறைந்தது; 260 பேர் சாவு

1 min read

The daily corona in India dropped to 28,326; 260 deaths

26.9.2021

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 28,326 பேராக குறைந்தது. ஒரே நாளில் 260 பேர் இறந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏற்றம், இறக்கங்களை சந்தித்தி வருகிறது. இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை 31,382 பேருக்கும், புதன்கிழமை 29,616 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,326 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 16,671 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,52,745 ஆக அதிகரித்துள்ளது.

260 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,918 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,032 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,02,351 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,03,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 85,60,81,527 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,42,786 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 14,88,945 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,31,50,328 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *