May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

2ம் உலகப்போருக்குப்பிறகு கொரோனாவால் சராசரி மனித ஆயுட்காலம் குறைந்தது

1 min read

The average human lifespan was reduced by the corona after World War II

27.9.2021

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் கொரோனா தாக்கத்தை அடுத்து கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு மூலமாக நிரூபித்துள்ளனர்.

கொரோனா

உலகெங்கிலும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது மற்றும் நான்காவது அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் தற்போது வைரஸின் வீரியம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால் ஆசிய நாடுகள் பலவற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் மக்கள் முகக் கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இரண்டாம் உலகப்போரில் பலர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் 29 நாடுகளில் கடந்த 2020ம் ஆண்டு பிறப்பு இறப்பு விகிதம் குறித்த ஓர் ஆய்வு மேற்கொண்டது. இதில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளன.
பிறப்பு விகிதம்

கொரோனா தாக்கத்தை அடுத்து இந்த நாடுகளில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு முயலும் கூறப்படுகிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ், இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சராசரி ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. நடுத்தர வயது கொண்ட குடிமக்கள் அதிகமாக 2020ஆம் ஆண்டு பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 60 வயதை எட்டிய பலர் பலியாகியுள்ளனர். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கொரோனா தாக்கத்தினையடுத்து கணிசமாகக் குறைந்து வருவது இந்த ஆய்வு மூலமாகத் தெளிவாகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.