அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை; ரூ.27 லட்சம் பறிமுதல்
1 min readAction check in government offices; Rs 27 lakh confiscated
30.9.2021
தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி அரசு அலுவலகங்களில் திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ. 27 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கூறப்படுவதாவது:-
சோதனை
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம் ( ஆர்.டி.ஓ.,), டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்சாயத்து அலுவலகங்கள் , ஊரகவளர்ச்சித்துறை, தாலுகா அலுவலகம், ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர் , மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் , மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ,திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,ஈரோடு, திருப்பூர், கோவை, உட்பட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணமாக ரூ. 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 பறிமுதல் செய்யப்பட்டது.