தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,612 ஆக சற்று குறைந்துள்ளது: 28 பேர் சாவு
1 min readIn Tamil Nadu, the incidence of Govt has dropped slightly to 1,612: 28 deaths
30.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,624-ல் இருந்து 1,612 ஆக சற்று குறைந்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,626 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,53,327 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,612 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 924 பேர் ஆண்கள், 688 பேர் பெண்கள். தமிழகத்தில் 1,626 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,11,061ஆக உயர்ந்துள்ளது.
28 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 28 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,575 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக இருந்த நிலையில் இன்று (29ம் தேதி) 189ஆக அதிகரித்துள்ளது.
கோவை
கோவையில் 176 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும், ஈரோட்டில் 109 பேருக்கும், தஞ்சையில் 98 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 20 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இன்று 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.