‘நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி வவ்வால்களிடமே உள்ளது
1 min read‘Bats have immunity against the Nipah virus
30.9.2021
‘நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரசைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது’ என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ்
கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் பதிவாகும் தினசரி கோவிட் பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகிறது.
இந்நிலையில் அங்கு நிபா வைரசும் பரவத் துவங்கியது. கடந்த 5ம் தேதி 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தான்.
இதுகுறித்து கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளதாவது:-
வவ்வால்கள்
கேரள அரசு மேற்கொண்ட ஆய்வில், ரம்புட்டான் பழங்களில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐ.சி.எம்.ஆர். அப்பகுதியில் சில வவ்வால்களின் உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றது. அந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கும் அனுப்பப்பட்டன.
ஆய்வு முடிவில், நிபா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி), நிபாவைப் பரப்பும் வவ்வால்களின் உடலிலேயே இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆர்., மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.