இந்தியாவல் தினசரி கொரோனா பாதிப்பு 23,529 ஆக உயர்வு; 311 பேர் சாவு
1 min readIndia’s daily corona exposure rises to 23,529; 311 deaths
30/9/3032
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. புதிதாக 23,529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 311 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை 18,795 பேருக்கும், புதன்கிழமை 18,870 பேருக்கும் கொரோனா பதிவானது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 12,161 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக அதிகரித்துள்ளது.
311 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,48,062 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்போர் விகிதம்1.33 சதவீதமாக உள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.83 சதவீதமாக உள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,77,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 88,34,70,578 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,34,306 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,06,254 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,89,56,439 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.