ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி
1 min read6 killed as bus plunges into river
30.9.021
மேகாலயா மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
பேருந்து கவிழ்ந்தது
மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 21 பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து, கிழக்கு காரோ மற்றும் மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லை அருகே அதிகாலை வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நோங்ச்ராம் பாலத்தில் இருந்து ரிங்டி ஆற்றில் விழுந்தது.
6 பேர் பலி
இதில், பேருந்து ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரோங்ஜெங் மற்றும் வில்லியம் நகர் பகுதி தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரின் மோதி கவிழ்ந்ததாக பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.