இந்தியாவில் புதிதாக 22,842 பேருக்கு கொரோனா; 244 பேர் பலி
1 min readCorona for 22,842 newcomers in India; 244 killed
3.10.2021
இந்தியாவில் புதிதாக 22,842 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் ஒரே நாளில் 25,930 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை இந்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 244 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,817 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,30,94,529 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 25,930 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,70,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 90,51,75,348 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.