கடந்த 2 மாதங்களில் தடுப்பூசி போடாதவர்களே கொரோனாவுக்க அதிகமாக பலி
1 min readThose who have not been vaccinated in the last 2 months are more likely to die of coronavirus
3.10.2021
‘கடந்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 87 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்’ என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
உயிரிழப்பு
கொரோனா தடுப்பூசி மரணத்தை வெகுவாக தடுக்கிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1626 பேர் கொரோனா உயிரிழந்துள்ளனர். இதில் 1419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். அதாவது 87 சதவீதம். இவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் இறப்பை தவிர்த்திருக்க முடியும். அதேபோல முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கோவி்ட்டால் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு மாதங்களில் 88 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டதில் தடுப்பூசி செலுத்திய 45 சதவீதம் பேர் பாதிப்பின்றி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 5816 பேரில் 4405 பேர் தடுப்பூசி போடாதவர்கள்.
இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.