May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குப்பதிவு

1 min read

73.27 per cent turnout in the local body 2nd phase election

9.10.2021

உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27-சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.