September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழ்த்தரமாக பேசுவதில் போட்டிப்போடுவதா?; அண்ணாமலை கண்டனம்

1 min read

Competing to speak in a vile manner? Annamalai condemns it.

28.9.2026
பொதுவெளியில் யார் மிகவும் கீழ்த்தரமாக பேசுவதில் போட்டி என அமைச்சர் ஆதவ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் அநாகரிக பேச்சை வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் ஆதவ் ஆகிய இரு தலைவர்களும் ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசிய வீடியோவை இன்ஸ்டா சமூக வலைதளத்தில் வெளியிட்டு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பொதுவெளியில் யார் மிகவும் கீழ்த்தரமாக பேச முடியும் என்பதற்கான போட்டியாகத் தமிழக அரசியல் வேகமாக மாறி வருகிறது. நமது இளைஞர்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கான சரியான பாதையை உங்களால் காட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் உங்கள் நாகரிகமற்ற நடத்தையினால் அவர்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லாதீர்கள்.

பொதுவெளி பேச்சில் நாகரிகத்தை, பொறுப்பை அரசியல் தலைவர்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *