தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு
1 min read
Corona for 1,303 people in Tamil Nadu today; 13 deaths
11.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,329 -ல் இருந்து 1,303 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,428 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,39,836 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,303 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 744 பேர் ஆண்கள், 559 பேர் பெண்கள். இன்று 1,428 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,27,780 ஆக உயர்ந்துள்ளது.
13 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,796 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக இருந்த நிலையில் இன்று 168 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும், தஞ்சையில் 60 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 16 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.