June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம்

1 min read

Five soldiers killed in gun battle in Jammu and Kashmir

11.10.2021

பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ராணுவவீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் தாக்குதல் அதிகமாக உள்ளது. நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் கொலைக்கு காரணமான நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இந்த நிலையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *