August 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 1,245 பேருக்கு கொரோனா; 16 பேர் சாவு

1 min read

Corona for 1,245 people in Tamil Nadu; 16 deaths

15.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,259 -ல் இருந்து 1245 ஆக சற்று குறைந்துள்ளது. 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,442 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் 1,35,760 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1,243 பேருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் இருவரையும் சேர்த்து 1,245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,84,641 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 740 பேர் ஆண்கள், 505 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,442 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,33,534 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,869 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக இருந்த நிலையில் இன்று 167 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் இன்று 139 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும், ஈரோட்டில் 91 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 18 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 15 பேருக்கும் கொரோனா கண்டறியப்ப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.
கோவையில் இன்று 6 பேர் இறந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பதூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *