August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரியில் கஞ்சா விற்ற பெண் கைது

1 min read

Woman arrested for selling cannabis in Sivagiri

17.10.2021
சிவகிரியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா

தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி விஜயா (வயது 38). இவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது . உதவி ஆய்வாளர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விஜயா பதுக்கி வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *