August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சசிகலாவுக்கு எதிராக ஜெயக்குமார் போலீஸ் நிலையத்தில் புகார்

1 min read

Jayakumar lodged a complaint at the police station against Sasikala

20.10.2021

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்தார்.

சசிகலா

கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார்.

அங்கிருந்த கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்

இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சசிகலாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *