கேரளாவில் தொடரும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை
1 min read
eavy rains continue in Kerala; Orange warning
கேரளாவில் தொடரும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை
23.10.2021
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவி்ல் மழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை நேற்று வலுவிழந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனினும், தென் தமிழக கடலோரப் பகுதியிலிருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி நீடித்து வருகிறது.
இதன் காரணமாக அக்டோபர் 26ம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், இடி மின்னலுடன் சேர்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
இதனிடையே இன்றும் பல இடங்களில் மஞ்சள் அலர்ட்வெளியிடப்பட்டது. நாளை பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (அக்டோபர் 25ம் தேதி) கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அணை பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
135 சதவீதம் கூடுதல்
கேரளாவில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழை அளவை விட 135 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும், சராசரியாக 192.7 மி.மீ அளவு மழைப்பதிவு இருக்க வேண்டிய காலகட்டத்தில் இந்தாண்டு 453.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் வரை பலியாகியுள்ளனர்.