May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மாணவர்களை பள்ளிக்கூடம் வர கட்டாயப்படுத்தக்கூடாது; அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி பேட்டி

1 min read

Students should not be forced to come to school; False interview with Minister Mahesh Anbil

24/10/2021
நவம்பர் 1-ந் தேதி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. மாணவர்களை பள்ளிக்கூடம் வர கட்டாயப்படுத்தக்கூடாது
அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி கூறினார்.

பள்ளிக்கூடங்கள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் ஆன் லைன் மூலமாக பல வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து முதல்லி்ல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்பின் மேல்நிலை வகுப்புகளும், அடுதது 9, 10 ம் வகுப்புகளும் திறக்கப்பட்டன.

மன அழுத்தம்

ஆனால் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. கடந்த 19 மாதங்களுக்கு மேல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.
இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகின.

1-ந் தேதி முதல்

இந்தநிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பி்த்தது.

சுத்தம்

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளித் தூய்மை, புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் ,தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் , தலைமை ஆசிரியர் அறை , சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் . வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் .
பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும் , மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை , மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி வருகின்ற 27ஆம் தேதிக்குள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கூறினார்.
அதன்படி அனைத்துப் பள்ளிக்கூடங்களையும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

பெற்றோர்கள்

1-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்-முறையாக பள்ளிக்கு வருவதால் அவர்கள் எவ்வாறு முககவசம் அணிவது, எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். ஆகவே, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடியும் வரை அவர்களுடன் உடன் இருக்கலாம். என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே சொல்லி இருந்தார். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முககசவம் அணிய முடியாத நிலை ஏற்படும் போது எப்போது வீட்டுக்கு செல்ல நினைக்கிறார்களோ அப்போது செல்லலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கூடம் திறப்பு பற்றி அன்பில் மகேஷ் பொய்யாமல் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கட்டாயப்படுத்தக்கூடாது

வருகிற 1-ந் தேதி 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. மாணவர்களின் ஒழுகத்தை மேம்படுத்துவதற்காகவே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்தப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தீபாவளி 4-ந் தேதி வருகிறது. தீபாவளி முடிந்து வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அப்போது வரலாம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வகுப்பறையில் சமூக இடைவெறி பின்பற்றப்படும். இதற்காக வகுப்புகள் ஷிப்டு முறையில் நடத்தப்படும். மாணவர்கள் வரும் பேருந்துகளில் சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.

இல்லம் தேடி கல்வித் திட்டம்

“இல்லம்தேடி கல்விதிட்டம்” நவம்பர் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மாலை 5 முதல் 7ந் தேதி நடக்கிறது. இது 2 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகள அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சா மகேஷ் அன்பில் பொய்யாமொழி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.