ஜனாதிபதியிடம் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்
1 min read
Actor Rajinikanth congratulated the President
25.10.2021
மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பால்கே விருது
மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.