கூட்டு பயிற்சிக்காக 6 இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை சென்றன
1 min read
6 Indian warships went to Sri Lanka for joint training
26.10.2021
கொழும்பு-கூட்டு பயிற்சிகளில் ஈடுபட இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 போர் கப்பல்கள் இலங்கைக்கு சென்றுள்ளன.
கூட்டுப்பயிற்சி
இந்தியா – இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு சென்றள்ளன.கொழும்பு மற்றும் திரிகோணமலை துறைமுக பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கப்பல்கள், இலங்கை கடற்படை கப்பல்களுடன் வரும் நாட்களில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.
இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவுக்கான துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்முறை
இலங்கைக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை தந்துள்ளது, இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வு. இவ்வளவு கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.இருநாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டு கடல் பகுதிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.