June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- கணவர் குடும்பத்தினர் மீது புகார்

1 min read

Young girl hangs herself near Sivagiri – Complaint against husband’s family

14.5.2024
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி அருகன்குளம் பகுதியில் திருமண மான இரண்டரை ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அருகன்குளம் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் என்பவரது மகன் கணேசன் (வயது 29), கட்டிட தொழிலாளி. இவருக்கும், விருதுநகர் மாவட் டம் ராஜபாளையம் தாலுகா முறம்பு அருகே கிழவிகுளத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் வேல்ம யிலுக்கும் (28) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தக ராறு ஏற்பட்டது. கர்ப்பிணியாக இருந்த வேல்மயில் கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற் றோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்குபெண்குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந் தைக்கு ஒன்றரை வயது ஆகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் தனது உறவினர்களுடன் மாமனாரின் வீட்டுக்கு சென்று, மனைவி வேல்மயிலை சமாதானம் செய்து குழந்தையுடன் அருகன்குளத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் கணேசன், அரசு வேலைக்கு செல்வதற்கு தனக்கு ரூ.3 லட்சம் தேவைப்படுகிறது என்றும். எனவே நகையை விற்று பணம் வாங்கி வருமாறு மனைவி வேல் மயிலிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வேல்மயில் திடீரென்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சிவகிரி போலீசார் விரைந்து சென்று, வேல் மயிலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வேல்மயிலின் தாயார் குரு பாக்கியம் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்
அதில், “எனது மகள் வேல்மயிலிடம் ரூ.3 லட்சம் வாங்கி வருமாறு வேல்மயிலின் கணவர் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். எனவே வேல்மயில் சாவில் மர்மம் உள்ளது.

இதுதொடர்பாக அவரது கணவர், மாமனார் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரி வித்து இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மான இரண்டரை ஆண்டுகளில் வேல்மயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கவிதா செல்வி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *