பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை பணியிடை நீக்கம்
1 min read
Dismissal of teacher celebrating Pakistan victory
26/10/2021
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை
சூப்பர்-12 சுற்று போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வரும் நபீசா அட்டாரி என்ற ஆசிரியை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர, நபீசா அட்டாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் செய்தி பரப்பிய காரணத்தை சுட்டிக்காட்டி அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.