கடையம் யூனியன் தலைவர் திடீர் ராஜினாமா
1 min readKadayam union leader resigns abruptly
29.10.2021
சமீகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் தென்காசி மாவட்டம் கடையம் யூனியில் மொத்தம் 17 யூனியன் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. சார்பாக 12 பேரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக 5 பேரும் வெற்றிபெற்றனர்.
கடையம் யூனியன் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பாக ஜெயக்குமார் பெயர் அறிவிக்கப்பட்டது. கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த இவர் மந்தியூர் பகுதியில் நின்று யூனியன் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். தலைவர் தேர்தலின் போது ஜெயகுமார் மட்டுமின்றி செல்லம்மாள் என்பவரும் வேட்பு மனுதாக்கல் செய்தார். இவரும் தி.மு.க. கவுன்சிலர்தான். தலைவர் தேர்தலில் செல்லம்மாள் தேர்வு செய்யப்பட்டார். அவர் யூனியன் தலைவராக பதவி ஏற்றார். தி.மு.க. கவுன்சிலர்களே தலைமை நிறுத்திய ஜெயக்குமாருக்கு ஒட்டுப்போட வில்லை என்பது தெளிவானது.
இதன் காரணமாக கடையம் ஒன்றிய செயலாளர் குமார் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யதார். இதற்கிடையே செல்லம்மாள் தன்னை ராஜினாமா செய்ய தி.மு.க. மாவட்ட செயலாளர் சொன்னதாவும் இல்லையேல் 1 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டியதாகவும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.