June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 10,126 பேர் கொரோனா; 332 பேர் சாவு

1 min read

10,126 new Corona in India; 332 deaths

9.11.2021
இந்தியாவில் புதிதாக 10,126 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 332 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் புதிதாக 10,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்த அறிக்கையில் கூறி உள்ளது.

இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும். நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,404 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரத்து 113 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 262 பேர் உள்பட மேலும் 332 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,389 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 11,982 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 86 ஆக உயர்ந்தது.

தற்போது 1,40,638 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தடுப்பூசி

நாடு முழுவதும் நேற்று 59,08,440 டோஸ்களும், இதுவரை 109 கோடியே 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *