June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சகவீரர்கள் தாக்குதலால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்

1 min read

At least 18 people have been killed in a Central Reserve Police Force attack

9.11.2021
2019ம் ஆண்டு முதல் இதுவரை சகவீரர் தாக்குதலால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் முகாமில், ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த மூவரில், இரண்டு பேர் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதனால் 6 வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தின் லிங்கம்பள்ளி முகாமில் நடைபெற்றது.

18 பேர் சாவு

இந்தநிலையில் ‘‘கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை, சக வீரர்களால் தாக்கப்பட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் 13 முறை நடைபெற்றுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் சுக்மாவில் நடைபெற்ற தாக்குதலுடன் 2021-ம் ஆண்டு இதுவரை ஐந்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளது’’ என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தகவல் வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *