ராஜஸ்தானில் பேருந்து- டிரக் மோதி பயங்கர விபத்தில் 12 பேர் பலி
1 min read
12 killed in Rajasthan bus-truck collision
10/11/2021
ராஜஸ்தானில் பேருந்து- டிரக் மோதி பயங்கர விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
விபத்து
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த மாநிலம் பலோத்ராவிலிருந்து ஜோத்பூருக்கு இன்று காலை 9.55 மணி அளவில்36க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. அது வேகமாக சென்று கொண்டிருந்த போது, சாலையின் தவறான பக்கத்தில் இருந்து வந்த லாரி, பேருந்து மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. லாரி மோதிய பின் உடனடியாக பேருந்து தீப்பிடித்து எரிந்து.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 22-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.