‘ஜெய்பீம்’ படத்தில் வில்லனுக்கு அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என மாற்றியது ஏன்? ; அன்புமணி கண்டனம்
1 min read
Why was the villain in ‘Jaybeam’ changed to Anthony Samy as Kurumurthy? ; Anbumani condemned
11.11.2021
‘ஜெய்பீம் படத்தில், பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக, குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும்’ என, நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியகடிதத்தில் கூறியிருப்பதாவது:
கேள்வி
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாதது. தயாரிப்பாளர் என்ற முறையில், கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். கேள்விகள் விபரம்:
பெயர் மாற்றம் ஏன்?
- கொலையுண்ட பழங்குடி இளைஞர் பெயர் ராஜாக்கண்ணு. அவரை படுகொலை செய்த காவல் துறை அதிகாரி பெயர் அந்தோணிசாமி. ராஜாக்கண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் பெயர் சந்துரு. விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.,யின் பெயர் பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டியுள்ளீர்கள்.
ஆனால், காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மட்டும், அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன்; நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்? - ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி, இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஊராட்சி தலைவரும், ஊர் மக்களும் தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.