இந்தியாவில் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்; முப்படை தளவதி பிபின் ராவத்
1 min read
China’s biggest threat to security in India; Brigadier General Pipin Rawat
12/11/2021
இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அச்சுறுத்தல்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இமயமலை பகுதிகளில் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட பத்தாயிரகணக்கான வீரர்கள் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகம் அதிகரித்தல் ஆகியவை தடையாக உள்ளன.
இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.