இந்தியாவில் மேலும் 9,119 பேருக்கு கொரோனா; 396 பேர் சாவு
1 min read
Corona for 9,119 more in India; 396 deaths
25.11.2021
இந்தியாவில் மேலும் 9 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 396 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 9 ஆயிரத்து 283 ஐ விட சற்று குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
396 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.