தத்து கொடுத்த குழந்தையை திருப்பிக் கேட்டு தாய் வழக்கு; ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
Mother sues for return of adopted child; high Court judgment
27.11.2021
தத்துக்கொடுத்த சிறுமியை கேட்டு, பெற்ற தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
தத்து கொடுத்த தாய்
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சத்யா. இவரது சகோதரர் சிவக்குமார். சத்யாவுக்கு ரமேஷ் என்பவருடனும், சிவக்குமாருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடந்தது. சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால், சிவக்குமார். தனது 5 மாத குழந்தையை சத்யாவுக்கு கடந்த 2012ல் தத்து கொடுத்தார்.
கடந்த 2019 ம் ஆண்டில் சத்யா கணவர் ரமேஷ் புற்றுநோயால் காலமானார். இதனால், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என சரண்யா, அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
வழக்கு
இந்நிலையில், குழந்தையை ஒப்படைக்க கோரி, தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் பிஎன் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அமர்வு, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் வேண்டும் என சிறுமி கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
வளர்ப்பு தாயிடம்..
வளர்ப்பு தாயிடமே வளர்ந்த குழந்தை தற்போது சிறுமி ஆகிவிட்டார். இதனால், அச்சிறுமியைவளர்ப்பு தாயே வளர்க்க வேண்டும் எனவும், சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும். பெற்ற தாய், வாரம் ஒரு முறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.