May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்; இந்தியா கண்டனம்

1 min read

Pakistani beauty photo shoot at Sikh holy site; India condemned

1/12/2021

பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனிதத்தலத்தின் அருகே பாகிஸ்தான் மாடல் போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

புனிதத்தலம்

சீக்கியர்களின் புனிதத்தலங்களில் ஒன்று குருத்வாரா தர்பார் சாஹிப். இது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் இந்த தர்பார் சாஹிப் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் செளலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார். பொதுவாக குருத்வாராவிற்கு செல்லும் போது அனைவரும் தலை மூடியை மூடி இருக்க வேண்டும். ஆனால் இந்த படங்களில் செளலேஹா தனது தலை மூடி தெரியும்படி இருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

எதிர்ப்பு

செளலேஹா சீக்கிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பலரும் இணையத்தில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் செளலேஹா தனது செயலுக்கு மன்னிப்பைக் கேட்டிருந்தார். சீக்கிய கலாச்சாரத்தைத் தான் மதிப்பதாகவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

கண்டனம்

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய அரசும் பாகிஸ்தான் தூதரிடம் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. கர்தார்பூர் சாஹிப்பில் போட்டோஷூட் தொடர்பாகப் பாகிஸ்தானின் இரண்டாவது மூத்த தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இது கண்டிக்கத்தக்கச் சம்பவம். இந்தியா மற்றும் சீக்கிய சமூகத்தினரின் உணர்வுகளை இது ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.