May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சாவு

1 min read

2 terrorists killed in Kashmir encounter

1.12.2021

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் குவாஸ்பா யர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குவாஸ்பா யர் பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

2 பேர் சாவு

பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள்.

பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் எனவும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.