இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,764 பேராக அதிகரிப்பு; 220 பேர் சாவு
1 min readDaily corona exposure in India increased to 16,764; 220 deaths
31.12.2021
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16,764 பேராக உயர்ந்தது. அதே நேரம் உயிரிழப்பு 220 பேராக சற்ற குறைந்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. கடந்த புதன்கிழமை 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அது நேற்று 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உயர்ந்திருந்தது.
கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், இன்று காலை மீண்டும் தொற்று உயர்ந்து உள்ளது. அதாவது இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 91,361 பேர் (நேற்று 82,402 பேர்) சிகிச்சையில் உள்ளனர். 7,585 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால், குணமடைந்தோர் விகிதம் 98.36 சதவீதமாக உள்ளது.
220 பேர் பலி
கொரோனாவுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் (நேற்று 268 பேர்) உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860ல் இருந்து 4,81,080 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 15 ஆயிரம் கடந்து உள்ளது.
ஆனால் நேற்று ஒப்பிடும் போது நேற்று காலை இறப்பு சற்று குறைந்துள்ளது.