June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – பொது மக்கள் பீதி

1 min read

Wild elephants enter town near Tenkasi – public panic

1.5.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதிக்குள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊர் பகுதிக்குள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் வனப்பகுதிக்குள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் குடிப்பதற்கு தண்ணீரை தேடி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள ஊர் பகுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும் இந்த யானைகள் ஊர் பகுதிக்குள் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

மேக்கரை பகுதியில் காட்டு யானைகள் வலம வருவதைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் தங்களது பயிர்களை அழித்து நாசம் செய்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் வனத்துறை நிர்வாகமும் இந்த பிரச்சனைகள் தலையிட்டு ஊர் பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை தடுத்து நிறுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காற்று யானைகளால் நாசம் செய்யப்பட்டுள்ள மரங்கள் மற்றும் விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *