தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை – மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min readProhibition of conducting direct classes from 1st class to 8th class in Tamil Nadu – MK Stalin’s order
31.12.2021
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நேரடி வகுப்புகளுக்கு தடை
தமிழ்நாடு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டப்பாடுகளை அதிகரிப்பது, இன்றுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால், 1ம் வகப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மழலையர் பள்ளிகள் செயல்படவும் அனுமதி இல்லை.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு
- ஜன. 10- வரை ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி.
சினிமா தியேட்டர்கள்
- தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- வழிபாட்டு தலங்களில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
- மழையர், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை.
- 9 முதல்12 வகுப்பு வரை பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.
பொருட்காட்சி
- பொருட்காட்சி, புத்தக கண்காட்சிகள் நடத்துவதற்கு ஒத்தி வைப்பு
*உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- துணிக்கடை, நகைக் கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- பொழுது போக்கு, கேளிக்கை பூங்காங்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
மெட்ரோ ரெயில்
- மெட்ரோ ரயில்நிலையங்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
- அழகுநிலையங்கள், சலுான் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- அரசு பஸ் போக்குவரத்துகளில் பயணிகள் இருக்கைகளுக்கு மிகாமல் அனுமதி.
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.