தமிழகத்தில் இன்றைய கொரோனா 1,155; ஒமைக்ரான் 74
1 min readToday’s Corona 1,155 in Tamil Nadu; Omicron74
31.12.2021
தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு 74 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,04,615 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,144 பேர், ஐக்கிய அரபு எமிரேட் 7, கத்தார், இலங்கை மற்றும் ஓமனில் இருந்து திரும்பி வந்தவர்கள் தலா ஒருவரும் மற்றும் மேற்குவங்க மாநிலத்திலிருந்து வந்த ஒருவர் , என மொத்தம் 1,155 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,48,045 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 665 பேர் ஆண்கள், 490 பேர் பெண்கள்.
இன்று 603 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,03,799 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
தமிழக்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,776 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக இருந்த நிலையில் இன்று 589 ஆக சற்று அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 137 பேருக்கும், கோவையில் 70 பேருக்கும், நெல்லையில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 30 பேருக்கம் தென்காசியில் ஒருவருக்கம் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான்
தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், குழு பரவலாக மாறியுள்ளதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 120 பேருக்கு ஓமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 66 பேர் குணமடைந்தனர்.