May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு போட்டகொரானா ஊசி/ நகைச்சுவைக் கதை

1 min read

Potacorana injection for Kannayiram / comedy story by Thabasukumar

9.1.2022
கண்ணாயிரமும் அவர் மனைவி பூங்கொடியும் மோசன் டெஸ்ட் மற்றும்யூரின்டெஸ்ட் ரிசல்ட்டுவாங்க டாக்டர் அறையை நோக்கி நடந்தார்கள். அவர்கள் முககவசம் அணியாமல் செல்வதைபார்த்த நர்ஸ் அவர்களிடம் முககவசம் போடாம டாக்டரை பார்க்ககூடாது.முககவசம் போட்டுட்டுபோங்க என்று எச்சரித்தார். கண்ணாயிரம் அவரிடம் நாங்க முககவசம் கொண்டு வரல என்று சொன்னார். உடனே அந்த நர்ஸ் இரண்டு முககவசம் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணாயிரமும் பூங்கொடியும் அந்த முககவசம் அணிந்துகொண்டு டாக்டர் அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றனர். முககவசம் அணிந்தபடி டாக்டர் அமர்ந்திருந்தார்.
கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் பார்த்து உட்காருங்க என்றார். அவர்கள் அமர்ந்தனர். என்ன கண்ணாயிரம். ஊரெல்லாம் உங்களைப்பற்றிதான் பேச்சா இருக்கு போல… பரபரப்பா..இருக்கீங்க..நல்லது…என்ன கண்ணாயிரம் உடம்பைசரியா பாக்கக்கூடாதா…என்றார். கண்ணாயிரம்..தன் உடம்பை சுற்றி, சுற்றி பார்த்தார். டாக்டர் சிரித்தபடி..கண்ணாயிரம்..உடம்புக்குமேலே நல்லாத்தான் இருக்கு.. உள்ளுக்குத்தான் பிரச்சினை.. என்றார். பூங்கொடி திடுக்கிட்டு என்ன டாக்டர் சொல்லுறீங்க என்று கேட்டார்.
டாக்டர், ஒண்ணும் பயப்படவேண்டியதுஇல்ல.. சுகர் கொஞ்சம் அதிகமா இருக்கு. சுகரை குறைக்கணும். மாத்திரை எழுதி தர்ரேன்.. என்ன என்ன சாப்பிடணும், என்ன, என்ன சாப்பிடக்கூடாதுன்னு இந்த துண்டு பிரசுரத்திலே இருக்கு..
அதை பாலோபண்ணுங்க.. சுகர் குறைஞ்சுடும்.. ஒருமாசம் கழிச்சு வாங்க.. எப்படி இருக்குன்னுபாப்போம் என்றார்.
டாக்டருக்கு வணக்கம்தெரிவித்துவிட்டு இருவரும் ஆஸ்பத்திரியில் உள்ள மருந்தகத்தில் மாத்திரைவாங்க புறப்பட்டனர்.
மாத்திரைகள் வாங்கிபணம் செலுத்திவிட்டு கண்ணாயிரமும் பூங்கொடியும் ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேவந்தார்கள். கண்ணாயிரத்துக்கு முககவசத்தை மாட்டியதால் ஏதோ மூச்சு முட்டுவதுபோல இருந்தது. முககவசத்தை கழற்றி சட்டைப்பையில் வைத்துக்கொண்டுநடந்தார். பூங்கொடி முககவசத்தை வாய்விட்டு கீழே இறக்கிவிட்டு மூச்சுவாங்கியபடி நடந்தார். ஆட்டோவுக்காக இருவரும் பஸ்நிறுத்தத்தில் நின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு முரட்டு வாலிபர் சிகரெட்டை எடுத்து பற்றவைத்தார்.
கண்ணாயிரம் உடனே ஏம்பா வேறஇடத்திலேபோய் புகைக்கக்கூடாதா என்று கண்டித்தார். அதை கேட்டதும் அந்தவாலிபர்கோபம் அடைந்து கண்ணாயிரத்தின் முகத்தில் சிகரெட்டுபுகையை ஊதினார். கண்ணாயிரம் மூக்குக்குள்புகைபோனதும் ஆச், ஆச், என்று தும்மினார். அவரைபார்த்து பூங்கொடியும் அச், அச் என்று தொடர்ந்து தும்மினார்.
அப்போது அங்கு வேகமாக வந்த போலீசார்… கண்ணாயிரத்தை யும் பூங்கொடி யையும் பார்த்து ஏன் முககவசம் அணியல.. நூறுரூபாய் பைன் என்றனர். கண்ணாயிரம் சட்டைப்பையில் முககவசம் வச்சிருக்கேன் என்றார். ம்.. முககவசம்.. சட்டைப்பையில் வைக்க இல்ல, முகத்தில்மாட்டுறதுக்கு.. முதலில் முககவசத்தை மாட்டுங்க..என்று அதட்டினார்கள். கண்ணாயிரமும் பூங்கொடியும் வேகமாக முககவசத்தை மாட்டினார்கள். ஏன் இரண்டுபேரும் தும்முனீங்க.. கொரானாவுக்கு ஊசிபோட்டிங்களா. என்று கேட்டனர்.
கொரானாவுக்கு எப்படி ஊசிபோடமுடியும்.. அதான் கண்ணுக்கு தெரியாதே என்றார் கண்ணாயிரம். என்ன கண்ணாயிரம்… அப்போ ஊசிபோடலையா..அந்த வேனில் ஏறுங்க.. பக்கத்திலே மருத்துவமுகாம் நடக்கு.. ஊசிபோட்டுக்குங்க..போங்க..போங்க…என்று இரண்டுபேரையும் வேனில் ஏற்றி அனுப்பினார்கள். கண்ணாயிரம் தனக்கு கொரானா இல்லை.. முரட்டு வாலிபர் சிகரெட் புகையை ஊதியதால்தான்.. எனக்கு தும்மல், இருமல் வந்தது என்று சொல்லிப் பார்த்தார். யாரும் கேட்கவில்லை. இப்பதான் பிளட் டெஸ்ட்டுக்கு ஊசிபோட்டிருக்கு, மறுபடியும் ஊசியா, வலிக்குமா என்று பூங்கொடி யிடம் கேட்டார். எனக்கென்ன தெரியும்.. உங்களால்தான் எனக்கும் ஊசிபோடப்போறாங்க.. என்றார். கண்ணீர் கசிந்திருந்தது. மருத்துவமுகாமில் வேன் வந்து நின்றது. கண்ணாயிரமும், பூங்கொடியும் கொரனாதடுப்பூசிபோடும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். செல்போனில் பூங்கொடிபோட்டோ எடுத்துிவைத்திருந்த ஆதார் கார்டிலிருந்து ஜெராக்ஸ் காப்பி எடுத்து கொடுத்தார். இருவரது முகவரியை குறித்து கொண்டபின் கண்ணாயிரம் கொரானா ஊசிபோட்டுக்கொள்ள உள்ளே அழைக்கப்பட்டார். கண்ணாயிரம் பதட்டத்துடன் உள்ளே சென்றார். ஊசியுடன் நர்ஸ் தயாராக நின்றார். கண்ணாயிரத்தைபார்த்து சேரில் உட்காருங்க.. என்றார். கண்ணாயிரம்.. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தார். அவரது கையில் கொரானா தடுப்பூசியை நர்ஸ்வலி தெரியாத அளவுக்கு மென்மையாக போட்டார். லேசாக எறும்பு கடிப்பது போலிருக்கு.. வலிக்கல… என்றார் கண்ணாயிரம். சரி, ஊசிபோட்டஇடத்திலே தேய்க்ககூடாது, ஒத்தணம்கொடுக்க்கூடாது. மூணுமாத்திரை தர்றேன் மூணுவேளைபோடுங்க..என்று சொல்லியவாறு மாத்திரைகொடுத்தார். வெளியே உள்ளசேரில் பத்துநிமிடம் இருங்க.. ஏதாவது மயக்கம் வந்தா சொல்லுங்க.. என்று அவரை நர்ஸ் அனுப்பிவைத்தார். கண்ணாயிரம் வெளியேவந்தார். பத்துபேர்சேரில் அமர்ந்திருந்தனர். கண்ணாயிரமும் ஒருசேரில் உட்கார்ந்தார். ஊசிபோட்டுக்கொண்டவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முதல்ஊசிபோட்டபோது வலிச்சுது.காய்ச்சல் அடிச்சது. மாத்திரைபோட்டேன் சரியாபோச்சு.. இரண்டாவது ஊசிபோட்டிருக்கேன் என்ன செய்யுமோ தெரியல என்றார். கண்ணாயிரத்துக்கு கொஞ்சம்பயமாக இருந்தது. ஊசிபோட்டதற்கான சீட்டை வாங்கிசட்டைப்பையில் வைத்துக்கொண்டார். முககவசத்தை கழற்றலாமா என்றுயோசித்தபோது, எல்லோரும் முககவசத்தை மாட்டுங்க. சமுக இடைவெளிவிட்டு உட்காருங்க.. என்று நர்ஸ் சத்தமாக கூறினார். கண்ணாயிரம்.. ம்.. வேறுவழியில்லை..முககவசத்தை கழற்றவேண்டாம் என்று முடிவுசெய்தார். அப்போது பூங்கொடியும் கொரானா ஊசிபோட்டுவிட்டு அங்கே வந்து சேரில் அமர்ந்தார். உனக்கு மயக்கம் வருதா.. வந்தா உடனே சொல்லு என்றார் கண்ணாயிரம். அதற்கு அவர்.. அமைதியா இருங்க.. இருபது நாள்கழிச்சு இரண்டாவது ஊசிவேற போடணுமாம்..கைவலிக்கு என்றார் பூங்கொடி.
பத்துநிமிடம்கழித்து இருவரும் மருத்துவமுகாமைவிட்டு வெளியேவந்தார்கள். பூங்கொடி..ஆட்டோசெலவுமிச்சம்..நம்ம வீட்டுபக்கத்திலேதான் மருத்துவமுகாம் இருந்திருக்கு..வீட்டுக்கு நடந்தேபோயிடலாம்.. என்றார் கண்ணாயிரம். அதை கேட்டதும். பூங்கொடி.. ம்.. மெதுவாபோங்க.. நான் வேகமா நடக்கமுடியாது என்றார். சரி, சரி, மெல்ல நடக்கிறேன்..என்றார் கண்ணாயிரம். இருவரும் மெதுவாக.. வீடுவந்து சேர்ந்தார்கள்.கண்ணாயிரம் நடந்துவந்தது களைப்பாக இருக்கு.. காபிபோட்டுதா என்றார். பூங்கொடி.. ஏங்க.. உங்களுக்கு.. சுகர் இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாரு..இனிஉ்ங்களுக்கு காபிகிடையாது… வென்னிபோட்டுதர்ரேன்.. குடிங்க.. என்றார். என்னடா வம்பா போச்சு.. .. சுகர் வந்தா ஒண்ணும் சாப்பிடக்கூடாதா..என்று ஏக்கத்துடன் கண்ணாயிரம் கேட்டார். பூங்கொடி உடனே.. அது ஒரு பட்டியலே இருக்கு.. அதை நீங்க சாப்பிடலாம் என்றார். கண்ணாயிரம்.. அப்படியா.. அந்த பட்டியலை படி என்றார் கண்ணாயிரம். பூங்கொடி படிக்க ஆரம்பித்தார். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு மயக்கம்வருவது போலிருந்தது.

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.