June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரியின் உறவினர் வீட்டில் ரெய்டு

1 min read

Punjab Chief Minister’s relative’s raided as election looms

18/1/2022
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரியின் உறவினர் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் தேர்தல்

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான புபீந்தர் சிங் ஹனியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் புபீந்தர் சிங் ஹனியின் வீடு மற்றும் அவருக்கு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் முதல்-மந்திரியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் சம்பவம் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *