May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளர் பெயர் அறிவிப்பு

1 min read

Punjab Election: Aam Aadmi Party First-Ministerial Candidate Name Announcement

18.1.2022
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

முதல்வர் வேட்பாளர்

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி முதல்-மந்திரி வேட்பாளராக பக்வந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

ஹர்பல் சிங் சீமா, பக்வந்த் மான் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்வந்த் மான் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பக்வந்த் மான் தற்போது பஞ்சாபின் சங்கூர் தொகுதி எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என விருப்பத்தை தெரிவிக்கும்படி அக்கட்சி சார்பில் வாட்ஸ்-அப், மெசேஜ், செல்போன் அழைப்பு மூலம் கட்சியினர், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதில், பெரும்பாலானோர் முதல்-மந்திரி வேட்பாளராக பக்வந்த் மானை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் அவரையே ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.