June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

1 min read

Success of BrahMos supersonic missile test

20.1.2022
பாதுகாப்புத்துறையின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று (ஜன. 20) விண்ணில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பிரம்மோஸ்

நவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை பாதுகாப்பு , ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கியது. ஏவுகணையை வடிவமைத்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்..

கடந்த 11 ஆம் தேதி கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *